search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்.
    X
    தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்.

    தாராபுரம் அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டம் ரத்து

    கொரோனா பரவல் காரணமாக தாராபுரம் அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
    தாராபுரம்:

    இந்திய அளவில் புகழ்பெற்ற கோவில்களில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலும் ஒன்று. 

    இந்தகோவிலில் ஆண்டுதோறும் 10 பத்து நாட்களுக்கு கொடிமரம் ஏற்றப்பட்டு தினசரி அனுமந்தராய சுவாமி மற்றும் ராமர் சீதை, ராகவேந்திரர் ஆகிய சுவாமிகளுக்கு பல வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடை பெறும். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கி சாமி தரிசனம் செல்வதுண்டு. 8-ம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம், 9-ம் நாள் நிகழ்ச்சியாக உற்சவர் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். 

    மேலும் கோவிலில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்ட பிறகு சுவாமியிடம் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சாப்பிட்ட இலையில் படுத்து உருளுவது சிறப்பு வாய்ந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு 18-ந்தேதி திருவிழா  தொடங்கி 27-ந்தேதி முடிவடைகிறது.   

    கொரோனா தொற்று வீரியம் அதிகம் இருப்பதால் ஊரடங்கு அமல்படுத்தபட்டு கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் இன்றி தினந்தோறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா தவிர்த்து பக்தர்கள் இன்றி வழக்கம் போல் 10 நாட்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் அறங்காவலர் குரு தெரிவித்தார்.
    Next Story
    ×