search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்- தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

    கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம். 

    * சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயம். 

    * அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2000. 

    * அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம். 

    * வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.4.000-மாகவும், 10 கிலோ மீட்டருக்கு பிறரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×