search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலத்தில் கொரோனாவுக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பலி

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது.

    நேற்று மாலைவரை சேலம் மாவட்டத்தில் மொத்தம் 49 ஆயிரத்து 371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 44 ஆயிரத்து 618 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 115 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த13 ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் கொரோனா தொற்று ஏற்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 638 ஆக இருந்தது. இன்று 640 ஆக அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×