search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயதான தம்பதி
    X
    வயதான தம்பதி

    6 குழந்தைகள் பெற்றும் அனாதையான சோகம்- உணவின்றி தவித்த தம்பதி போலீசில் தஞ்சம்

    திண்டுக்கல்லில் 6 பிள்ளைகள் இருந்தும் உணவுக்காக ஏங்கும் நிலை வயதான தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் பொன்னையா(79). இவரது மனைவி பாண்டியம்மாள்(69). இவர்களுக்கு 3 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பொன்னையா மற்றும் பாண்டியம்மாள் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    காவலாளியாக வேலை பார்த்து வந்த பொன்னையாவிற்கு இடது கை செயலிழந்து விட்டது. தற்போது வயது மூப்பின் காரணமாக 2 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொன்னையா வேலை இழந்துள்ளார்.

    இதனால் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பொன்னையா மற்றும் பாண்டியம்மாள் தவித்து வருகின்றனர். 6 பிள்ளைகள் இருந்தும் இவர்களை கண்டுகொள்ளாததால் வறுமையின் கொடுமையால் மனமுடைந்தனர். இதனால் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 6 குழந்தைகள் இருந்தபோதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒருவேளை உணவுக்குகூட வழியில்லாமல் உள்ளோம். எனவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர். இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வயதான தம்பதிகளின் 6 பிள்ளைகளை அழைத்து விசாரணை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை முடிவில் அவர்களின் கடைசி மகளான மகேஸ்வரியுடன் செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மகேஸ்வரியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். 6 பிள்ளைகள் இருந்தும் உணவுக்காக ஏங்கும் நிலை வயதான தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் கொடுமை எப்போது முடியுமோ என தெரியவில்லை.

    Next Story
    ×