search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

    சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
    சென்னை:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் குடிகாடு பகுதியில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் 50 சதவீத தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இன்று காலை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    கடலூர் சிப்காட் தொழிற்சாலை

    கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதனை கண்ட அங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருசில தொழிலாளர்கள் நெருப்பில் சிக்கி கொண்டனர். இதனால் அவர்கள் உயிர் பிழைக்க கூச்சல்போட்டனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். என்றாலும் இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.

    அங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலூர் முதுநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், மேலும் காயமடைந்த 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×