search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
    X
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் 4 நோயாளிகள் உயிரிழப்பு

    தமிழகத்திலும் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நீண்ட வரிசையில் கொரோனா நோயாளிகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் வழங்குதல், படுக்கைகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்திலும் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நீண்ட வரிசையில் கொரோனா நோயாளிகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன்  படுக்கை இல்லாததால் 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.

    அவர்கள் ஆக்சிஜன் படுக்கைக்காக காத்திருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    கோப்பு படம்


    தனியார் மருந்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது

    ஆம்புலன்சில் செயற்கை சுவாசம் மூலம் சிகிக்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
    Next Story
    ×