search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் அப்பாவு
    X
    சபாநாயகர் அப்பாவு

    சட்டசபையில் அனைவருக்கும் வாய்ப்பு- சபாநாயகர் அப்பாவு

    தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு வந்து அமரும்படி அழைப்பு விடுத்தார். சபாநாயகர் இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கினார்.

    இதைத் தொடர்ந்து அப்பாவுவை சபை உறுப்பினர்கள் வரவேற்று மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

     எடப்பாடி பழனிசாமி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எழுந்து அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அனைவரையும் வணங்கி சபை நிகழ்ச்சியை நடத்தினார்.

    இதையடுத்து துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவியேற்றார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர்கள், சபை உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

    இறுதியாக சபாநாயகர் அப்பாவு ஏற்புரை நிகழ்த்தி பேசினார்.

    தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார்.

    சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் ஒரே மாதிரியாக செயல்படுவேன்.

    மக்களுக்கு வேண்டியதை நிறைவேற்றும் அவையாகவும், அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கும் அவையாகவும் நிச்சயம் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×