search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    குமரி மாவட்டத்திற்கு 4,500 டோஸ் கொரோனா தடுப்பூசி நெல்லையிலிருந்து கொண்டு வரப்பட்டது

    கொரோனா டுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முன்களபணியாளர்கள், டாக்டர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தற்போது 45 வயது மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முதலில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய பொதுமக்கள் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 91,808 பேர் முதல் கட்ட தடுப்பூசியும், 37, 267 பேர் 2-ம் கட்ட தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தற்போது மேலும் பலரும் தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து தடுப்பூசியை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    நெல்லையில் இருந்து நேற்று மாலை 4,500 டோஸ் கொரோனா தடுப்பூசி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உள்பட சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. தடுப்பூசி வந்த தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு வந்திருந்தனர். சுகாதார மையங்களில் தடுப்பூசி போடு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தடுப்பூசி போட வந்த பலரும் தடுப்பூசி போட முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்தது. தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    Next Story
    ×