search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று காலை முதல் மாலை 6 மணிக்கு மூடும் வரை தொடர்ந்து அமோகமாக மது விற்பனை நடந்தது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் மதுக்கடைகள், பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அனைத்து மதுக்கடைகளிலும் கடும் கூட்டம் அலைமோதியது.

    ஒவ்வொருவரும் கடையை முற்றுகையிட்டு 5 மதுபாட்டில் முதல் 10 பாட்டில்கள் வரை வாங்கி சென்றனர். சிலர் ‘புல்’ மதுபாட்டில்கள் பலவற்றை வாங்கி சென்றனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று காலை முதல் மாலை 6 மணிக்கு மூடும் வரை தொடர்ந்து அமோகமாக மது விற்பனை நடந்தது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    இதற்கு முன்பு தீபாவளி, பொங்கல் திருநாளில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடந்திருந்தது.

    ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    ஒவ்வொரு ‘குடி’மகன்களும் 2 வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றதே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×