search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கோவை ரெயில் நிலையம் எதிரே உள்ள கடைகளுக்கு அபராதம்

    கடைகளில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் மற்றும் கடையில் அமர்ந்து உணவருந்த அனுமதித்த 8 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    கோவை:

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அங்கு முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமி‌ஷனர் மகேஷ் தலைமையில் எஸ்.ஒ. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த் கோவை ரெயில் நிலையம் முன்பு உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைகளில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் மற்றும் கடையில் அமர்ந்து உணவருந்த அனுமதித்த 8 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கடைகள் அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×