search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூரில் 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்ததால் தடுப்பூசி போட பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக தடுப்பூசி போடும் பணி பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இதன் காரணமாக விரைவில் தட்டுப்பாடு நீங்கி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×