என் மலர்
செய்திகள்

தற்கொலை
குமரிக்கு வந்த வடமாநில சிறுவன் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் வடமாநில சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மைஷா பகரியா (வயது 16). வேலை தேடி குமரிக்கு வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்தார். அங்கு சம்பளம் குறைவாக கிடைத்துள்ளது. இந்தநிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என கேள்விப்பட்ட சிறுவன் நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார் குடியிருப்பில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை கேட்டு சென்றுள்ளான். அங்கு வேலை கிடைக்கவில்லை. 16 வயதே ஆவதால் வேலை தர முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மைஷா பகரியா கம்பெனியின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story