search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு - தமிழகத்துக்கு 419 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    பிரதமருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொலைபேசியில் பேசினார். கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்.

    மாநிலத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார் பிரதமர் மோடி.

    இதைத்தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோப்புபடம்

    இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஐநாக்ஸ் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 50 மெட்ரிக் டன்னில் இருந்து 140 மெட்ரிக் டன்னாகவும், சேலத்தில் தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக் டன்னாகவும், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து 38 மெட்ரிக் டன்னாக அதிகரித்தும் புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

    ஆக்சிஜனில் 44 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யவும், ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 60 மெட்ரிக் டன்னாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×