search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாசுதேவநல்லூரில் காணாமல் போன 11 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

    வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் சிலரது செல்போன்கள் காணாமல் போனதாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் சிலரது செல்போன்கள் காணாமல் போனதாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ. எண்ணின் மூலம் தற்போது அந்த செல்போன்கள் யாரிடம் உள்ளன? என்பதை போலீசார் கண்டறிந்து அவற்றை மீட்டனர். இதுபோன்று 11 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×