search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழப்பு

    கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1567 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கரூர்:

    தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருந்துபோதிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. ஆரம்பத்தில் ஒன்றை இலக்கத்தில் இருந்த தொற்று கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1567 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவிற்கு ஏற்கனவே சிகிச்சை பெற்ற வந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 4 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×