search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் திரண்ட மக்கள்
    X
    கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் திரண்ட மக்கள்

    ரெம்டெசிவிர் மருந்துக்காக 12வது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

    கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த ரூ.1,500 விலைக்கே ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தை எட்டும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

    சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் பொதுமக்கள் தினமும் அலைமோதி வருகிறார்கள்.

    கடந்த 12 நாட்களாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக நள்ளிரவு முதல் பொதுமக்கள் தினமும் திரண்டு வருகிறார்கள்.

    ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அது கள்ளச்சந்தையில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரையில் கள்ளச்சந்தையில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும், மருந்து கடை ஊழியர்கள் சிலரும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதனால் ஏழை-எளியவர்கள் வெளி மார்க்கெட்டில் இந்த மருந்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆனால் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த ரூ.1,500 விலைக்கே ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகள் சிலருக்கு 6 குப்பி ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும். இது போன்ற நிலையில் கீழ்ப்பாக்கத்தில் மருந்து வாங்கினாலே ரூ. 9 ஆயிரம் ஆகி விடுகிறது.

    ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரிசையில் நின்ற மக்கள்

    இதனை வெளி மார்க்கெட்டில் ரூ. 20 ஆயிரத்துக்கு வாங்கும்போது ரூ.1.20 லட்சம் ஆகும் என்பதாலேயே அரசு நிர்ணயித்த விலைக்கு மருந்தை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் கூடுகிறார்கள்.

    ரெம்டெசிவிர் மருந்தை இனி வரும் காலங்களில் கூடுதலாக விநியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படுவதுபோல மேலும் சில அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த மருந்துகளை தேவையான அளவுக்கு விநியோகிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    Next Story
    ×