search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்
    X
    இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

    மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதை உற்சாகமாக கொண்டாடும் திமுகவினர்

    “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி பிரமாணத்தை மு.க.ஸ்டாலின் படித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
    சென்னை:

    தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.  அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும்  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

     “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி பிரமாணத்தை மு.க.ஸ்டாலின் படித்தார். பிறகு ரகசிய காப்பு உறுதி மொழியையும் படித்து முடித்தார். அவரைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 

    முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த கட்சி தொண்டர்கள், மு.க.ஸ்டாலினை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×