search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பயணிகள் வருகை குறைவால் 24 ரெயில்கள் ரத்து

    பயணிகள் வருகை குறைவால் 24 ரெயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரெயில்வே துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    பயணிகளின் வருகை குறைவு காரணமாக 24 ரெயில்களை ரத்து செய்து ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லும் தினசரி ரெயில் (எண்.02649), ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தினசரி ரெயில் (02650) நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    அதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு வரும் தினசரி ரெயில் (02673), கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தினசரி ரெயில் (02674) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரெயில் (02679), கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் இன்டர்சிட்டி ரெயில் (02680) நாளை முதல் 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (02681) வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (02682) வருகிற 14-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (02697) வருகிற 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (02698) நாளை முதல் 29-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் வாராந்திர ரெயில் (06019) 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக செல்லும் ரெயில் (06020) வருகிற 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களுரூக்கு செல்லும் ரெயில் (06627) 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையும், மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் (06628) நாளை முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தினசரி ரெயில் (02695) நாளை முதல் 30-ந் தேதி வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் (02696) 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் (02677) 9-ந் தேதி முதல் 1-ந் தேதி வரையும், எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தினசரி ரெயில் (02678) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடி செல்லும் வாராந்திர ரெயில் (06161) 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும், பனஸ்வாடியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் (06162) 10-ந் தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் (06843) நாளை முதல் 30-ந்தேதி வரையும், பாலக்காடு டவுனில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் (06844) 9-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ரெயில் (06167) 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர ரெயில் (06168) 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை செய்யப்படுகிறது.

    இந்தத் தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×