search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.என்.நேரு
    X
    கே.என்.நேரு

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்கும் கே.என்.நேரு

    1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட்ட நேரு பெற்ற வெற்றியின் மூலம் பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.என்.நேருவுக்கு வயது 69. தி.மு.க. முதன்மை செயலாளராக உள்ளார். 1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட்ட நேரு பெற்ற வெற்றியின் மூலம் பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

    ஸ்டாலின் மற்றும் கே என் நேரு


    1996 தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006 இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது மனைவி பெயர் சாந்தா, ஹேமா, ஆர்த்தி ஆகிய 2 மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×