search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை-மதுரை, ரெயில் உள்பட 74 சிறப்பு ரெயில் சேவைகள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் இருக்கைகள் நிரம்பாததால் 74 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் இருக்கைகள் நிரம்பாததால் 74 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரெயில்களில் போதிய அளவு இருக்கைகள் நிரம்பாததால், சென்னை எழும்பூர்-காரைக்குடி (வண்டி எண்: 02605) சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், காரைக்குடி-எழும்பூர் (02606) சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை (02613) மற்றும் மதுரை-எழும்பூர் (02614) சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையும், எழும்பூர்-மதுரை (02635), எழும்பூர்-திருச்சி (02653) சிறப்பு ரெயில்கள் வருகிற 9-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (02636), திருச்சி-எழும்பூர் (02654) சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், எழும்பூர்-மதுரை (06157) சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (06158) சிறப்பு ரெயில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.

    கொரோனா பரிசோதனை


    சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஈரோடு (02649), ஈரோடு-. சென்டிரல் (02650), சென்டிரல்-கோவை (02673), கோவை- சென்டிரல் (02674), சென்டிரல்-கோவை (02679), கோவை-சென்டிரல் (02680) சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்டிரல்-கோவை (02681) சிறப்பு ரெயில் 15-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரையிலும், கோவை- சென்டிரல் (02682) சிறப்பு ரெயில் 14-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரையிலும், சென்டிரல்-மதுரை (06019) சிறப்பு ரெயில் 10-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரையிலும், மதுரை-சென்டிரல் (06020) ரெயில் 11-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

    எழும்பூர்-நாகர்கோவில் (06063) சிறப்பு ரெயில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) சிறப்பு ரெயில் 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், தாம்பரம்-நாகர்கோவில் (06191), எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஜோலார்பேட்டை (06089) சிறப்பு ரெயில்கள் 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06192), ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06090), தாம்பரம்-நாகர்கோவில் (06065) சிறப்பு ரெயில்கள் 9-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) சிறப்பு ரெயில் 10-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02698), எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (02695) சிறப்பு ரெயில்கள் 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (02697), திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02696) சிறப்பு ரெயில்கள் வருகிற 9-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    எழும்பூர்-புதுச்சேரி (06115) சிறப்பு ரெயில் 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், புதுச்சேரி-எழும்பூர் (06116) சிறப்பு ரெயில் 9-ந்தேதியில் இருந்து ஜூன் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், எம்.ஜி.ஆர். சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு (06075), கே.எஸ்.ஆர்.பெங்களூரு (06076), சென்டிரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-. சென்டிரல் (06080) சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், சென்டிரல்-மங்களூரு (06627) சிறப்பு ரெயில் 9-ந்தேதியில் இருந்து ஜூன் 1-ந்தேதி வரையிலும், மங்களூரு- சென்டிரல் (06628) சிறப்பு ரெயில் 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்டிரல்-திருப்பதி (06095), திருப்பதி-சென்டிரல் (06096) சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்தாகிறது. அதேபோல், சென்டிரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரெயில் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், நிசாமுதீன் - சென்டிரல் (06152) சிறப்பு ரெயில் 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 74 சிறப்பு ரெயில் சேவைகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×