search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா

    நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதுவரை தொற்று ஏற்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

    1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளும் பலருக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று நீடாமங்கலம் வட்டாரத்தில் நீடாமங்கலம் நகர பகுதி, கோவில்வெண்ணி, ராயபுரம், பொதக்குடி, வடுவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், கலையரசன், சண்முகராஜன், சரவணன் மற்றும் சுகாதார செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும், மன்னார்குடி அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

    பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த மாதம் (ஏப்ரல்) மாதத்தில் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் மட்டும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    Next Story
    ×