search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடியில் ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    புளியங்குடியில் ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பு விதிகள் மீறல்: புளியங்குடியில் 3 ஜவுளிக் கடைகளுக்கு‘சீல்’ வைப்பு

    புளியங்குடியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்ட 3 ஜவுளிக்கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    புளியங்குடி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணி சம்பந்தமாக நேற்று நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தலைமையில், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி முன்னிலையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    புதிய மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கடைகளிலும், பழைய மார்க்கெட், காந்தி பஜார் மற்றும் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்கக்கூடாது என அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் அறிவிப்பை மீறி செயல்பட்ட 3 பெரிய ஜவுளிக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் 13 கடைகளுக்கு ரூ.5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ.200 வீதம் 24 பேருக்கு ரூ.4,800 அபராதமும், தனி நபர் இடைவெளி பின்பற்றாத 15 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.7,500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு, அனைவருக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×