search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி
    X
    புழல் ஏரி

    சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் வராது- அதிகாரிகள் தகவல்

    சென்னைக்கு 85 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த ஆண்டு சென்னையில் அதிகளவு மழை பெய்த காரணத்தால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலும் தண்ணீர் உள்ளது.

    சென்னைக்கு 85 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    தற்போது குடிநீர் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது தவிர ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீரும் இந்தமாத இறுதியில் சென்னைக்கு வர உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

    செம்பரம்பாக்கம் ஏரி

    ஒவ்வொரு ஏரியில் உள்ள நீர்மட்டம் வருமாறு:-

    பூண்டி ஏரி 1056 மி.கன அடி (கொள்ளளவு 3231), புழல் ஏரி 2982 மி.கன அடி (கொள்ளளவு 3300), சோழவரம் ஏரி 692 மி.கன அடி (கொள்ளளவு 1081), செம்பரம்பாக்கம் ஏரி 2963 மி.கன அடி (கொள்ளளவு 3645) கண்ணன் தேர்வாய் கண்டிகை ஏரி 453 மி.கன அடி (கொள்ளளவு 500).
    Next Story
    ×