search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    டாஸ்மாக் மதுக்கடைகளில் காலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மதுக்கடைகள் முன்பு கடைகள் திறப்பதற்கு முன்பே மதுப்பிரியர்கள் குவிந்தார்கள்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இன்று முதல் 20-ந் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    ஓட்டல், டீக்கடை, மளிகைக்கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளும் காலை 8 மணி முதல் 12 மணிவரை 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்கமாக டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்க ப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது விற்பனை முழுமையாக தடை செய்யப் பட்டுள்ளது. தற்போது விற்பனை நேரம் பாதியாக குறைக்கப்பட்டதால் மது விற்பனை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் 6 மணிக்கெல்லாம் கடைகள் முன்பு குவியத் தொடங்கினர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மதுக்கடைகள் முன்பு கடைகள் திறப்பதற்கு முன்பே மதுப்பிரியர்கள் குவிந்தார்கள்.

    கடை ஊழியர்களும் 8 மணிக்கு முன்னதாக வந்து கடைகள் திறக்கும் பணியில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.

    மதுபானங்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்

    இன்று முதல் 15 நாட்களும் மதுக்கடைகள் குறைவான நேரத்தில் செயல்படுவதால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை காலையிலேயே வாங்கி இருப்பு கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பகல் 12 மணியை நெருங்கிய நேரத்தில் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்க திரண்டனர். தினமும் 9 மணி நேரம் செயல்பட்ட மதுக்கடைகள் இன்று முதல் 4 மணி நேரமாக குறைக்கப்பட்டதால் குறுகிய நேரத்தில் மது விற்பனை செய்ய வேண்டிய நிலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நகரம் முதல் கிராமங்கள் வரை உள்ள மதுக்கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. மதுக்கடைகள் மீண்டும் நாளை காலை 8 மணிக்குத்தான் திறக்கும் என்பதால் பலர் கூடுதலாக மதுபானங்களை வாங்கினார்கள்.

    இரவில் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் காலையிலேயே வாங்கி வைத்து கொண்டனர். ஒருசிலர் பகலிலேயே மது அருந்திவிட்டு வீடுகளில் முடங்கினார்கள்.

    மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறைவான நேரமே இருப்பதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரி கூறும்போது,

    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மது விற்பனை செய்யப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் விற்பனை நேரம் குறைந்ததால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    ஆனாலும் தேவையான அளவுக்கு எல்லா கடைகளிலும் மது இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விற்பனை நேரம் குறைந்ததால் வருவாயும் பாதியாக குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×