search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் அடைப்பு (கோப்பு படம்)
    X
    கடைகள் அடைப்பு (கோப்பு படம்)

    தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

    தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நோய் பரவலை தடுப்பதற்காக  புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. 20-ந்தேதி காலை 4 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். 

    தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும்.

    சென்னை மாநகர பேருந்து

    அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும், பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

    புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. மளிகை மற்றும் காய்கறி கடைகளில் மதியம் வரை மட்டுமே வியாபாரம் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக காலையிலேயே குவிந்தனர். 
    Next Story
    ×