search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு கொட்டிதீர்த்த கன மழை
    X
    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு கொட்டிதீர்த்த கன மழை

    திண்டுக்கல் மாவட்டத்தில் 10 செ.மீ மழை பொழிவு

    திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னிநட்சத்திரம் தொடக்க நாளான நேற்று 10 செ.மீ மழை பதிவானதால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகளவு காணப்பட்டது. அவ்வப்போது மழை வருவது போன்ற அறிகுறி தென்பட்டாலும் ஏமாற்றி சென்றது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் திண்டுக்கல் நகரில் 2 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதி முழுவதும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை காரணமாக நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. 9 மணிக்கு மேல்தான் மின்இணைப்பு சீரானது. இதேபோல கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், வத்தலக்குண்டு, செம்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    செம்பட்டி அருகில் உள்ள காமுபிள்ளைசத்திரம், மேட்டுப்பட்டி, பச்சமலையான்கோட்டை, எஸ்.புதுக்கோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. கடும் வறட்சியில் சிக்கியிருந்த பொதுமக்கள் இந்த மழையினால் ஆறுதல் அடைந்தனர்.

    மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பாக இந்த மழை அமைந்துள்ளது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல் 41.3, கொடைக்கானல் 20, நத்தம் 7.5, நிலக்கோட்டை 19.8, போட்கிளப் 17 மி.மீ மழையளவு பதிவானது. மொத்த மழையளவு 105.6 மி.மீ ஆகும். சராசரி 10செ.மீ.



    Next Story
    ×