search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதை காணலாம்
    X
    அமராவதி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதை காணலாம்

    அமராவதி அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிவு

    அமராவதி அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து தற்போது 70 அடியாக சரிந்துள்ளது. 90 அடி உயரமுள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் வரையில் 2 மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

    இந்நிலையில் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதிக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி இறுதி வரையிலும் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவிலேயே இருந்து வந்தது.

    பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் கோடை காலத்தில் அணை வறண்டு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி வரையிலும் அணை முழு கொள்ளளவிலேயே இருந்து வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 4 மாதங்கள் அணை முழுக்கொள்ளளவிலேயே இருந்து வந்தது .

    இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அணை பகுதி தொடங்கி கரூர் வரையில் கரையோர கிராம மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நிலைப்பயிர்களான கரும்பு, நெல், தென்னை ஆகியவற்றின் தண்ணீர்த் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் கடந்த 21-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களுக்கும் தலா 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து தற்போது 70 அடியாக சரிந்துள்ளது. 90 அடி உயரமுள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


    Next Story
    ×