search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 97.98 அடியாக சரிந்தது

    டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று விநாடிக்கு 1127 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 838 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது.

    டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை 98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலையில் 97.98 அடியாக சரிந்தது.
    Next Story
    ×