என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்
Byமாலை மலர்3 May 2021 5:07 PM GMT (Updated: 3 May 2021 5:07 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முக ஸ்டாலினுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
புதிய அரசு பதவியேற்பு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினேன். நோயாளிகள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்ற மருந்து பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
×