search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிராம்பட்டினத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளரிப்பழங்களை படத்தில் காணலாம்.
    X
    அதிராம்பட்டினத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளரிப்பழங்களை படத்தில் காணலாம்.

    சுட்டெரிக்கும் கோடை வெயில்: அதிராம்பட்டினத்தில், விற்பனைக்காக குவியும் வெள்ளரிப்பழங்கள்

    அதிராம்பட்டினம் பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதன் காரணமாக அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்பான விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

    இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு, இளநீர் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் விற்பனைக்காக வெள்ளரிப் பழங்கள் குவிந்து வருகின்றன.

    அதிராம்பட்டினம் பகுதிக்கு பேராவூரணி, கீரமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இதுகுறித்து வெள்ளரிப்பழ வியாபாரிகள் கூறியதாவது:-

    வெள்ளரி பழம் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணம் கொண்டது. கோடை காலத்தில் இதன் தேவை அதிகமாக உள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வெளிா் மஞ்சள், மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் வெள்ளரிப்பழங்கள் கிடைக்கின்றன.

    வெள்ளரிப்பழங்கள் பழுக்க பழுக்க உடைந்துவிடும் என்பதால், அதை பச்சை தென்னங்கீற்று, பனை ஓலை, வாழைநாரில் முழுமையாக கட்டி, அதிராம்பட்டினம் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறோம். வெள்ளரிப்பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
    Next Story
    ×