search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை 5 நாட்களில் சரியாகும்- கலெக்டர் தகவல்

    கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை 5 நாட்களில் சரியாகும் என்று தொழில் துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருப்பூரில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் தொழில் அமைப்பினருடன் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

    முழு ஊரடங்கை தவிர்க்க தினமும் புதிதாக உருவாகும் பாதிப்புகளை குறைக்க அனைத்து நிறுவனங்களும், தொழில் துறையினரும் ஒத்துழைக்கவேண்டும். கடந்த மூன்று வாரங்களாக திருப்பூரில் ஏற்படும் பாதிப்புகள் மோசமான அறிகுறிகளை காட்டுகிறது. அரசு சார்பில் காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    சுகாதார துறை ஊழியர்கள் மூலமாக தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் தடுப்பூசி போடும்போது தாமதங்களையும், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் அரசு உதவியை எதிர்பார்க்காமல் தொழில் துறையினர் தங்களது சொந்த செலவில் தங்களுக்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட முன்வரவேண்டும்.

    திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற 3 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன‌ அதில் 600 படுக்கைகளில் நோயாளிகள் தற்போது உள்ளனர். தேவையான மருந்து, ஆக்சிஜன் இருப்பில் உள்ளன.

    வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து விமானத்தில் ஆட்களை கூட்டி வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தடுப்பூசியை ஒரு செலவாக எடுத்துக் கொள்ளாமல் தொழில்துறையினர் அனைவரும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டு ஒத்துழைக்கவேண்டும்.

    தடுப்பூசிகள் பற்றாக்குறை இன்னும் 5 நாட்களில் சரி செய்யப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர், சைமா, சாயப்பட்டறை உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழில் துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×