search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் நடைபாதை வெறிச்சோடி இருப்பதை காணலாம்.
    X
    ஒகேனக்கல் நடைபாதை வெறிச்சோடி இருப்பதை காணலாம்.

    சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை- ஒகேனக்கல் வெறிச்சோடியது

    கொரானா தொற்று பரவலை தடுக்க சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் வெறிச்சோடியது.
    பென்னாகரம்:

    தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

    இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிக நடமாட்டம் உள்ள நடைபாதை, மெயின் அருவி, தொங்கு பாலம், பஸ் நிலையம், பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வராததால் பரிசல் ஓட்டிகள் காவிரி கரையோரத்தில் பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை வாழ்வாதாரமாக நம்பி உள்ள பரிசல் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×