search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கோவையில் கொரோனா பாதிப்பு 77,280 ஆக அதிகரிப்பு

    கொரோனா தொற்று காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,019 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 1,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,280 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 38 வயது ஆண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,019 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது 6,922 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை மாநகரில் 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் கோவை மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 1,322 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×