search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை- சுகாதாரத்துறை செயலாளர்

    45 வயதானவர்களுக்கு போடுவதற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரெம்டெசிவிர் மருந்து

    * சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    * தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே.

    * பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்

    * ஆர்டர் தந்த 1.50 கோடி தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என தெரியவில்லை.

    * 45 வயதானவர்களுக்கு போடுவதற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×