search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடன்குடி பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்தபடம்
    X
    உடன்குடி பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்தபடம்

    உடன்குடி பகுதியில் 2 வயது குழந்தை உள்பட 21 பேருக்கு கொரோனா

    உடன்குடி பகுதியில் 2 வயது குழந்தை உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்ட உடன்குடி புதுமனை கோட்டைவிளையைச் சேர்ந்த 21 வயது பெண், மாதவன்குறிச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயது மனைவி, 37 வயது கணவன், அவர்களுடைய 2 வயது பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், அவர்களின் எதிர் வீட்டில் வசிக்கும் 40 வயது ஆண், தண்டுபத்து புதுக்காலனியில் 36 வயது பெண், அருந்ததியர் காலனியில் 21 வயது பெண் மற்றும் உடன்குடி அனல்மின் நிலையத்தில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் 14 பேர் உட்பட மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மணப்பாடு, உடன்குடி பஸ் நிலையம், கல்லாமொழி ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

    வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் மருத்துவர்கள் ஜெயபரணி, நாயகி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சார்பில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் முக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுகாதாரமாக வாழுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    முககவசம் அணியாமல் பொதுஇடங்களில் நடமாடிய 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×