search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணி முக கவசம்
    X
    துணி முக கவசம்

    வதந்தியை நம்பாதீர்கள்- துணி ‘முகக்கவசம்’ பாதுகாப்பானது

    சூழல் அறிந்து எப்படிப்பட்ட முகக்கவசம் அணிவது என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.
    சென்னை:

    முகக்கவசம் அணிவது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசிக்க செய்கிறது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகிறது. இது ஒழுங்காக முகக்கவசம் அணிபவர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

    இதுபற்றி வைராலஜிஸ்ட் டாக்டர் பவித்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேவையற்ற குழப்பங்களையும், சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஆனால் அதில் சிறந்த முகக்கவசம் எது?

    கார்களில் பல மாடல்கள் இருக்கிறது. இருந்தாலும் நமது தேவைக்கு, பட்ஜெட்டுக்கு, வசதிக்கு எற்ற மாடல் எதுவோ அதைத்தான் தேர்வு செய்வோம்.

    அதேபோலதான் மாஸ்க்கை தேர்வு செய்வதும். ஒருவர் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார் என்றால் அங்குள்ள சூழ்நிலைக்கு என்95, ஷீல்டு ஆகியவைதான் தேவை. அதை அணிவதுதான் பாதுகாப்பு.

    நடைபயிற்சி செய்கிறோம். அருகில் கூட்டம் இருக்காது. வீட்டில் மொட்டை மாடிக்கு செல்கிறோம். அங்கும் அதேநிலைதான். இந்த மாதிரி இடங்களில் துணி முகக்கவசம் போதுமானது. எந்த மாஸ்கை போட்டாலும் சரி மூக்கையும், வாயையும் மூடும்படி அணிந்திருந்தால் மட்டுமே பிரயோஜனம்.

    சூழல் அறிந்து எப்படிப்பட்ட முகக்கவசம் அணிவது என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

    கார்பன்-டை- ஆக்சைடை சுவாசிக்க வைக்கிறது என்பது அடிப்படை இல்லாத வாதம். மனித உடல் அந்த அளவுக்கு முட்டாள்தனமானது இல்லை. எந்த காற்றை உள்ளே இழுக்க வேண்டும்? எந்த காற்றை வெளியே விட வேண்டும்? என்பது நன்றாகவே தெரியும்.

    அப்படி இருக்கும்போது கார்பன்-டை-ஆக்சைடை எப்படி சுவாசிக்க முடியும்? அப்படியானால் ஆண்டு கணக்கில் மருத்துவர்கள் முகக்கவசம் அணிகிறார்கள். அவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டுமே! அப்படி எதுவும் இல்லையே.

    முகக்கவசம்  அணியும்போது லேசான வெப்பம் இருக்கலாம். அது பழகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×