search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகிலன்
    X
    முகிலன்

    பா.ஜ.க. அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது- முகிலன் குற்றச்சாட்டு

    கூடங்குளம் அனல்மின் நிலையத்தை திறக்க மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள். அதேபோல ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்று முகிலன் கூறியுள்ளார்.
    கரூர்:

    கரூரில் நேற்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அதாவது நேற்று) அனைத்து கட்சி கூட்டம் கூட்டினார். வேதாந்தா நிறுவனம் நாட்டில் பல இடங்களில் நிறுவனங்கள் வைத்திருக்கும் போது தமிழகத்தில் தூத்துக்குடியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது எந்த விதத்தில் நியாயம்.
    ஸ்டெர்லைட் ஆலை
    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் வட இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

    இந்தியாவில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைதான் உள்ளது. தென்னிந்தியாவில் தேவை மிக குறைவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தான் ஆக்சிஜன் தயாரிக்க முடியுமா? ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை என்ற பெயரில் படிப்பிற்கான வேலை வழங்கவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார். முதலில் மக்களிடம் தூத்துக்குடி சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி செய்கிறார்கள்.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதி பெற்று விட்டால் அந்த நிறுவனத்தை செயல்பட வைத்து விடுவார்கள். கூடங்குளம் அனல்மின் நிலையத்தை திறக்க மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள். அதேபோல ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற ஆக்சிஜன் ஆலை என்பது வெடிகுண்டு போன்றது. வேதாந்தா குடும்பத்திற்கு வேலை செய்வது மட்டும் அரசுக்கு வேலை அல்ல, மக்களையும் பாருங்கள். இந்திய நாட்டில் சுற்றுச் சூழல் பாதிப்புகளை காரணம் காட்டி மூடப்பட்ட நிறுவனம், அனைத்தும் மக்கள் போராட்டம் மூலம் தான் மூடப்பட்டது. நீதிமன்றத்தால் மூடப்படவில்லை.

    இ்வ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×