search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் உள்ள ஓட்டலில் பார்சலில் உணவு வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    திருவாரூரில் உள்ள ஓட்டலில் பார்சலில் உணவு வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    கொரோனா கட்டுப்பாடு எச்சரிக்கை- திருவாரூர் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது

    கொரோனா கட்டுப்பாடு எச்சரிக்கையால் திருவாரூரில் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் பெரும்பாலான டீக்கடைகள் மூடப்பட்டன. விளையாட்டு அரங்கம், நீச்சல் குளமும் மூடப்பட்டது.
    திருவாரூர்:

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டு, பார்சல் மட்டுமே வழங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கட்டுபாட்டின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான டீக்கடைகள் மூடப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டதால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த கட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் வியாபாரம் சற்று குறைந்ததாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான டீக்கடைகளும் அடைக்கப்பட்டன.

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒட்டபந்தயம், கால்பந்து, ஆக்கி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு மைதானம் அமைந்துள்ளது. இதில் வாலிபால் போட்டிகளுக்கு உள் விளையாட்டு அரங்கம் வசதியும் உள்ளது. மேலும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுமதிக்கப்பட்டதுடன், உடல் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி கூடம் உள்ளது.

    இந்நிலையில் கொரோனா நோய் தொற்று தீவிரத்தின் எதிரொலியாக அரசு வழிகாட்டுதலின்படி விளையாட்டு அரங்கம் நேற்று மூடப்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தற்காலிக மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என விளையாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×