search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

    நேற்று நடந்த கூட்டத்தில் இவை தீர்மானங்களாக கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானம் பிரமாண பத்திரமாக தயாரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அந்த பிரமாண பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் பரவி வரும் கொரோனா 2-வது அலை வைரசின் தாக்கம் மிக அதிக அளவு இருப்பதால் நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.

    இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தற்போது ஆக்சிஜன் சப்ளை சீராகி வருகிறது.

    இந்தநிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்” என்று தெரிவித்தது.

    அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, “ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் எந்த காரணத்தை கொண்டும் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

    சுப்ரீம் கோர்ட்


    ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு அதை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு போகவே மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

    நேற்று நடந்த கூட்டத்தில் இவை தீர்மானங்களாக கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானம் பிரமாண பத்திரமாக தயாரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அந்த பிரமாண பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

    இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடை பெற்றது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த விசாரணை நடத்தியது.

    அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் பிரமாண பத்திரமும் ஆய்வு செய்யப்பட்டது.

    தமிழக அரசு 2 கோரிக்கைகளை முக்கியமாக தெரிவித்து உள்ளது. ஒன்று ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது. 2-வது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தர வேண்டும் என்று கூறி உள்ளது.

    இதுபற்றியும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×