search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    காய்ச்சல் பரிசோதனை கருவி, ஆக்ஸிமீட்டர் இல்லாமல் செல்லும் ஊழியர்கள்

    கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து வார்டுகளிலும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று கேட்டு வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    ஆனாலும் தொற்று பரவல் வேகமாக உள்ளது. வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்தினால் தொற்றை கட்டுப்படுத்தி விடலாம் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து வார்டுகளிலும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று கேட்டு வருகிறார்கள்.

    ஆனால் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை கருவி மற்றும் ஆக்ஸிமீட்டர் போன்ற எந்த கருவிகளையும் பயன்படுத்தவில்லை. வாய்மொழியாகவே அறிகுறிகளை கேட்டு வருகிறார்கள்.

    இதனால் பாதிப்பு உள்ளவர்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட தெர்மல் மீட்டர், ஆக்ஸிமீட்டர் கருவிகள் பழுதடைந்து விட்டன. அவை சரி செய்யப்படவில்லை. புதிய கருவிகளும் வாங்கி தரப்படாததால், வெறுமையாக களப்பணியாளர்கள் சென்று வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறியை கண்டறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆனால் இந்த முறை மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் காய்ச்சல் அறிகுறிகளை சரிவர கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி கூறும்போது, பழுதடைந்த கருவிகளுக்கு பதிலாக புதிய கருவிகள் விரைவில் வாங்கப்படும். ஆனாலும் களப்பணியாளர்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள தெருக்களுக்கு சென்று கண்காணிக்கிறார்கள் என்றார்.

    Next Story
    ×