search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது
    அனுப்பர்பாளையம்:

    முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

    மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் அடைக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் நேற்று முன்தினம் இரவே மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர்.

    இதற்காக மதுவை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்தபடி குவிந்தனர். சிலர் நீண்டநேரம் காத்திருந்து மொத்தமாகவும் மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×