search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    தமிழகத்தை மிரட்டும் கொரோனா... கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப் 26- ந்தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

    *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.

    *ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.

    *கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.

    *சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.

     *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
    கோப்பு படம்.
    *இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

    *அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    *உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

    *உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

    *மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

    *திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு.

    *மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.

    *கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு.

    *26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×