search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தனிமைப்படுத்தும் முகாமில் நள்ளிரவில் கொரோனா நோயாளிகள் போராட்டம்

    திருச்சி அருகே சேதுராப்பட்டியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையின்போது 200-ஐ தாண்டாத தினசரி பாதிப்பு தற்போது 350-ஐ தாண்டி சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டுகள் நிரம்பி வழிவதால் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். கல்லூரிகள், செவிலியர் விடுதி உள்ளிட்டவை சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதா சன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தும் முகாம்களில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சேதுராப்பட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை அளிக்கும் முகாமில் 400 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தங்கியுள்ளவர்களுக்கு சரியான நேரத்திற்கு சாப்பாடு தருவதில்லை, தர மற்ற உணவு வழங்கப்படுகிறது. குறைவான அளவு உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. நோயாளிகளில் பாதி பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு நோயாளிகளுக்கு தலா 3 சப்பாத்தி மற்றும் குருமா வழங்கப்பட்டுள்ளது. அப்போது குருமாவில் புழு இருந்துள்ளது. இதனை கண்ட நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித மான நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் முகாம் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சேதுராப்பட்டி கொரோனா தனிமை முகாமில் நோயாளிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    Next Story
    ×