search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சுவாமிமலை அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

    சுவாமிமலை அருகே சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சுவாமிமலை:

    குத்தாலம் பட்டவெளி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு கமலி, ஹெலன், சூரியா என மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இதில் முதல் மகள் கமலியை கும்பகோணம் மேலக்காவேரி பட்டகால் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாண்டியன் திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் ஹெலனை கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஆத்மநாதனும், சூரியாவை திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசண்முகமும் திருமணம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஓய்வுக்கு பின்னர் வந்த பணத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக அவரது மருமகன்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி தனது மூத்த மகள் கமலி வீட்டுக்கு வந்துள்ளார். இது தெரிந்து கொண்ட ஆத்மநாதனும், பாலசண்முகமும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பாண்டியனின் தந்தை விவசாயியான சுப்பிரமணியன், அவரது தம்பி சரவணன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ்காரர் ஆத்மநாதன், பாலசண்முகம், ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×