search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகள்.
    X
    மேலூர் பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகள்.

    கொரோனா காலத்தில் உரிய விலை கிடைக்காததால் தவிக்கும் கரும்பு விவசாயிகள்

    ஒவ்வொரு வருடமும் இந்த கோடைகாலத்தில் கரும்பு விலை கணிசமாக இருக்கும். ஆனால் தற்போது ஒரு கட்டு விலை ரூ.300-க்கும் குறைவாகவே கிடைக்கிறது.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் பயிரிடப்படும் கரும்புக்கு எப்போதும் கிராக்கி உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள மண் வளத்தால் சுவைமிகுந்த கரும்பும், பருமனான கரும்பும் கிடைக்கிறது.

    இதனால் தை மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் இங்கு இருந்து வெளி மாநிலங்களுக்கும் கரும்புகள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கை.

    தற்போது கோடை காலத்திற்காக கரும்பு விவசாயிகள் கரும்பினை பயிரிட்டுள்ளனர். அது தற்போது விளைச்சலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் மேலூர் அருகே உள்ள தனியா மங்கலம், வெள்ளலூர், சருகுவலையபட்டி போன்ற பகுதிகளில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தங்களது கரும்புகளை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக இந்த பருவத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் வியாபாரிகள் போதிய அளவு கரும்புகளை வாங்குவதற்கு வரவில்லை. மேலும் கோவில் திருவிழாக்கள் எல்லாம் தடைபட்டுள்ளதால் கரும்பு விற்பனை மந்தமாக உள்ளது.

    ஒவ்வொரு வருடமும் இந்த கோடைகாலத்தில் கரும்பு விலை கணிசமாக இருக்கும். ஆனால் தற்போது ஒரு கட்டு விலை ரூ.300-க்கும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்தும் இரவு பகலாக பாடுபட்டும் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் கரும்பை அறுவடை செய்து வேறுவழியின்றி போதுமான விலை இல்லாத சூழலிலும் அதனை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.



    Next Story
    ×