search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,016-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை நேற்று முன்தினம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாலை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.36 ஆயிரத்து 56-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36 ஆயிரத்து 16-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 502 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

    Next Story
    ×