search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பனியன் நிறுவன தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    திருப்பூரில் மனைவி, நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவு செய்து அனுப்பி விட்டு பனியன் நிறுவன தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த அவினாசிநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சரவணன் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அவருடைய நண்பரான அசோக் என்பவருக்கு சரவணன் வேறு ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார்.

    அந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சரவணன் பலமுறை அசோக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அசோக் அந்த பணத்தை சரவணனுக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அசோக் திடீரென்று சரவணனிடம் “நான் உன்னிடம் பணம் வாங்கவே இல்லை” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் சரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், கடும் மன உளைச்சலுக்குள்ளானார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அசோக்கிற்கு பணம் வாங்கி கொடுத்தது தொடர்பாகவும், அதை அவர் திரும்ப கொடுக்காதது உள்ளிட்டவற்றை சரவணன் வீடியோவாக பேசி பதிவு செய்து, தனது மனைவி கல்பனா மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சரவணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூரில் நண்பருக்கு கடனாக வாங்கி கொடுத்த பணத்தை அவர் திரும்ப கொடுக்காததால் பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×