search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 124 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,344 ஆக உயர்வு

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13,344 ஆக அதிகரித்து உள்ளது.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 220 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே நேற்று ஒரே நாளில் கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உள்பட 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,344 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 81 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 429 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 804 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×