search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நெல்லையில் இன்று போலீஸ்காரர்- செவிலியர்கள் உள்பட 256 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 256பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகர பகுதியில் 161 பேரும், பாளையில் 41 பேரும், வள்ளியூரில் 24 பேரும் அடங்குவர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி இருந்து வருகிறது. நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.

    இன்று வெளியான பரிசோதனை முடிவில் நெல்லை மாவட்டத்தில் 256பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகர பகுதியில் 161 பேரும், பாளையில் 41 பேரும், வள்ளியூரில் 24 பேரும் அடங்குவர்.

    வி.எம்.சத்திரத்தில் ஒரே வீட்டில் 71 வயது மூதாட்டி உள்பட 2 பேருக்கும், அதே பகுதியில் போலீஸ்காரரின் மகள் மற்றும் தாய்க்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

    சேரன்மகாதேவி போலீஸ் குடியிருப்பில் ஒரு போலீஸ்காரருக்கும், மாநகர பகுதியில் 2 செவிலியருக்கும், சந்திப்பு சி.என்.கிராமத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், சங்கர் நகரில் ஒருவருக்கும், மேலப் பாளையத்தில் 6 பேருக்கும், மகாராஜ நகரில் ஒரே வீட்டில் 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    செட்டிகுளம் அனுவிஜய் நகரியத்தில் இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் ஒரே வீட்டில் 4 வயது சிறுவன், 10 வயது சிறுமி மற்றும் அவர் களது தாய் ஆகிய 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று ஸ்ரீபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தையடுத்து சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு பணியாற்றி வரும் மேலும் ஊழியருக்கு தொற்று உறுதியானது.

    வண்ணார்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 3 பேருக்கு 2-வது முறை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    நெல்லை அரசு மருத்துவ மனையில் 1,064 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 196 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,937 ஆக உயர்ந்தது. இவர்களில் 16,550 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்றுடன் சேர்த்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,163 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×