search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை மாவட்டத்தில் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 735 பேர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப் பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொண்டையம்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு நோய்த் தொற்றுக்கு பலியானவர்க ளின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 618 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 62 ஆயிரத்து 726 பேர் கொரோனா வில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொண்டம்பாளையத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி இறந்தது குறித்து எஸ்.எஸ்.குளம் வட்டார மருத்துவர் யக்ஞபிரபா கூடிய கூறியதாவது:-

    கோவில்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட 2 பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று 4 பேருக்கு கொரோனா உறுதியானது.

    அதில் ஒரு மூதாட்டி இறந்ததால், மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றிய தலைவர் ஆகியோர் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

    கீரணத்தம் ஊராட்சியில் ஒரு பகுதியும், இடிகரை பேரூராட்சியில் ஒரு பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம்.

    மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் கொரோனா தடுப்பு பணிகளை செய்து வருகிறோம். எனவே பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருந்து அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×